2025 மே 15, வியாழக்கிழமை

மதுபானம் விநியோகித்த நடத்துனர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 26 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தோட்டையில் இருந்து லக்கலை வரையிலும் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றின் நடத்துனர், பஸ் பயணிக்கும் போது இடைநடுவில் நிற்கின்ற மதுவிற்பனையாளர்களுக்கு மனுபான போத்தல்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் பஸ்ஸின் சாரதியையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபானசாலைகளில் மதுபானங்களை கொள்வனவு செய்துகொள்ளும் பஸ் நடத்துனர், இடைநடுவில் காத்திருக்கின்ற மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு விநியோகிப்பதாக லக்கல பொலிஸ்க்கு தகவல் கிடைத்துள்ளது. 

பயணிகள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் உபாயத்தை கையாண்ட பொலிஸார், அந்த பஸ்ஸின் நடத்துனரிடமிருந்து நான்கு போத்தல் மதுபானங்களை கைப்பற்றியுள்ளதுடன் 7,000 ரூபாவையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .