2025 மே 15, வியாழக்கிழமை

சஜித்துக்கு எதிராக மனு: ரணிலுக்கு நோட்டீஸ்

Kanagaraj   / 2015 ஜூன் 29 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த மனுவை ஜூலை 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துகொள்வதற்கும் உயர்நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை தீர்மானித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சாதாரண முறைமையின் கீழ் கடன் பெற்றுகொடுக்கப்படும் திவிநெகும பிரஜா வங்கியின் நிதியை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை சுமத்தியே வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித்துக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளோருக்கே இவ்வாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரே இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க, சிசிர த அபா மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினால் ஆராயப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .