2025 மே 15, வியாழக்கிழமை

சட்டத்தை மீறினால் வழக்கு: மஹிந்த

Kanagaraj   / 2015 ஜூன் 30 , பி.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஊடாக மேல் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்வதற்கு தன்னால் முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவ்வாறு செய்வதற்கு தனக்கு, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்நிலையில், அரசாங்கம் சொத்துக்களை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, குமார் வெல்கம மற்றும் உதயன் கம்பன்பில, எம்.எம். முஸமில் ஆகியோரே இவ்வாறு முறையிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .