2025 மே 15, வியாழக்கிழமை

கிரிக்கெட் விளையாடியவர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 30 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- 2, வொக்ஸ்ஷோல் வீதியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன் அவ்வீதியில் பயணித்த வாகனங்களுக்கு இடையூறுவிளைவித்தமை தொடர்பாகவும், பாதசாரிகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாகவும் கொம்பனி வீதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான்.


இவ்வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் பிரியந்த லியனகேயால் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அச்சிறுவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கபட்டுள்ளதாகவும் இதுமாதிரியான செயற்பாட்டில் இனி ஈடுபடக்கூடாது என எச்சரித்து மேற்படி சிறுவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.


இது போன்ற குற்றச்சாட்டில் இரண்டாவது முறை ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின்படி ரூபாய் 5, 000 தொடக்கம் ரூபாய் 50,000 வரை அபராதம் விதிக்கப்பட்டலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .