2025 மே 15, வியாழக்கிழமை

கொட்டகெத்தன இரட்டை கொலை: ஜோடிக்கு பிணை மறுப்பு

Kanagaraj   / 2015 ஜூலை 03 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹாவத்தை, கொட்டகெத்தன இரட்டை கொலைவழக்கு தொடர்பில் மூன்றுவருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொக்குகமகேஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ மற்றும் அவருடைய மனைவியான ரஷிகா சாந்தனி உதயகுமாரி என்றழைக்கப்படும் அசோகா ஆகிய இருவருக்கும் பிணைவழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது.

அவ்விருவருக்கும் எதிரான வழக்கை ஜூரி சபையின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விருவருக்கும் பிணை வழங்குவதா இல்லாயா என்பது தொடர்பில் ஜூலை 6ஆம் திகதி  தீர்மானிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன ஜூன் 29ஆம் திகதி அறிவித்திருந்தார்.

கொட்டகெத்தன நயனா நில்மினி( வயது 52) காவிந்தியா சந்துரங்கி (வயது 17) ஆகியோர் கொலை தொடர்பிலேயே இவ்விருவரும் கடந்த 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்விருவருக்கும் 8 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 5 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அவ்விருவருக்கும் பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அன்று கோரிநின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .