Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 05 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வியறிவுமிக்க, திறமையான, நேர்மையானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். புதிதாக சிந்திக்கவேண்டிய காலம் தற்போது மலர்ந்துள்ளது என்று ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மின்சக்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பொன்று, பொரளையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'நாடாளுமன்ற உறுப்பினர்களாக உற்ற 225பேரில் 94பேர், க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்றும் அந்த 225பேரில் 192பேர், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றாதவர்கள் என்றும் கெபே அமைப்பு அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, யாரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
1 hours ago
14 May 2025