2025 மே 15, வியாழக்கிழமை

போதைப்பொருள் கலந்த மென்பான போத்தல்கள் மீட்பு

Kanagaraj   / 2015 ஜூலை 07 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்ட நஞ்சு போதைப்பொருள் கலந்த  மென்பானம் அடங்கிய 700 போத்தல்களை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஐவரை மாக்கொலையில் வைத்து கைதுசெய்துள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறான போத்தல்கள் மாக்கொல பட்டலந்த வீதியில் உள்ள களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.ஜி. குலரத்னவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட ஐவரும் களஞ்சியசாலையில் பணியாற்றுபவர்கள் என்றும் அவர்கள் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .