2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஐந்து செல்வங்களுக்கு தாயாவேன்: ஹிருணிகா

Princiya Dixci   / 2015 ஜூலை 17 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்துக்கு முன்னரே தான் கர்ப்பம் தரித்ததாக சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்கள், இன்னும் ஒன்பது மாதங்களில் உண்மையை அறிந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ள மேல் மாகாண சபைஉறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, தனது திருமண வாழ்வில், ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார். 

சில தினங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா தொடர்பில் தற்போது சில வதந்திகள் பரவிவருகின்ற நிலையிலேயே, அது தொடர்பில் அவர், தனியார் ஊடகமொன்றுக்கு விளக்கமளித்துள்ளார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஹிருணிகா, 'நான் கர்ப்பம் தரித்துள்ளதாலேயே திடீரென திருமண பந்தத்தில் இணைந்ததாக சிலர் கூறுகின்றனர். நான் அவர்களுக்கு ஒரே ஒரு விடயத்தை மாத்திரமே சொல்ல விரும்புகின்றேன். ஒன்பது மாதங்களில் பார்த்துக்கொள்ளுங்கள் எது உண்மை என்று' எனக் கூறினார். 

'ஹிரான் என்னுடைய மூன்றாவது காதலன். என் தந்தையைப் போல் என்னைப் பார்த்துக்கொள்ளும் ஒருவரையே நான் இதுவரை காலமும் தேடிக்கொண்டிருந்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. 

எங்களுடைய திருமண வாழ்க்கையை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திருமண வாழ்க்கையில் நான் ஐந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வேன்' என்று ஹிருணிகா, மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X