2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நீரில் மூழ்கி ஐவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 19 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலஸ்முல்ல, வராபிட்டிய வாவியில் குளிக்கச்சென்ற ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்களாவர்.

வராப்பிட்டிய ஏரிக்கு அருகில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் நீண்ட நேரமாக அநாதரவாக நின்றமையினால் இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், வாகனங்களில் வந்துள்ளவர்கள் குளிக்கச்சென்றுள்ளதை அறிந்து ஏரியில் தேடுதல் நடத்தியே போது நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

எனினும், நீரில் மூழ்கி நீரை அருந்திய நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இன்னும் இனங்காணப்படவில்லையெனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X