2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று வருகின்றனர்

Princiya Dixci   / 2015 ஜூலை 20 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க விருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை (20) வருகை தரவுள்ளதுடன், நாளை செவ்வாய்க்கிழமை (21)முதல் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் மூன்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம்,பொதுநலவாய நாடுகளின்  சங்கம் மற்றும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளே இவ்வாறு கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், இம்முறை தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் 110 பேர்வரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X