2025 மே 15, வியாழக்கிழமை

சி.ஐ.டி உயரதிகாரியின் இடமாற்றம் இடைநிறுத்தம்

Gavitha   / 2015 ஜூலை 26 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வுத் துறையின்(சி.ஐ.டி) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆவர், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் திணைக்களம் சனிக்கிழமை அறிவித்திருந்தது.  

தேர்தல் காலங்களில் அரச ஊழியர்களை இடமாற்றம் செய்வது தடையாகும். எனினும், தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கமுடியும் என்றும் பொலிஸ் திணைக்களம் அன்று அறிவித்திருந்தது.

தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் தேர்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட கையுடன் பொலிஸ் உயரதிகாரிகளை இடமாற்றம் செய்வது தவறான வழிநடத்தலாகும் என்று தேர்தகள் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .