2025 மே 15, வியாழக்கிழமை

பஸ் விபத்தில் 16 மாணவர்கள் காயம்

George   / 2015 ஜூலை 27 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, பௌதாலோக்க மாவத்தை ஆர்.எஸ்.பி. சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் முன்னால் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸின் சாரதி வீதி சமிஞ்சையை கவனிக்க தவறி முன்னால் சென்ற ஜீப் ரக வாகனத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விபத்தில் 12 மாணவிகளும் 4 மாணவர்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கபெறவில்லை


You May Also Like

  Comments - 0

  • prabakaran Monday, 27 July 2015 04:58 AM

    Ena Kodumi ithu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .