2025 மே 15, வியாழக்கிழமை

LTTE முன்னாள் உறுப்பினர் இந்தியாவில் கைது

Gavitha   / 2015 ஜூலை 27 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து  போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை, இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறித்த நபர் தப்பிச்செல்வதற்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் சென்னை மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .