2025 மே 15, வியாழக்கிழமை

குளித்துகொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் அறுவர் கைது

Kanagaraj   / 2015 ஜூலை 27 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி கங்கையின் கிளையாறுகளில் ஒன்றான கங்கே களுகமுவ ஆற்றில் குளித்துகொண்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவரும் மாணவியொருவரும் பேராதனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளையாற்றில் குளித்துகொண்டிருந்த போது, ஆபாசமான முறையில் நடந்துகொண்டதாக கிராமவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களை அடுத்த இந்த அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடும் ஆத்திரமுற்ற கிராமவாசிகள் அவர்கள், வருகைதந்தாக கூறப்படும் மோட்டார் சைக்கிள்கள் மூன்றின் டயர்களை வெட்டி சேதப்படுத்தியதன் பின்னர் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

மாணவர்கள் மதுபோதையில் இருந்ததாக பேராதனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அறிக்கையிட்டுள்ளார்.
அந்த மாணவர்களை அறுவருக்கும் அறிவுரை கூறி விடுவித்த  பொலிஸார், மாணவியை அவரது சகோதரனிடம் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .