Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஜூலை 30 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 2,073 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுபாட்டு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 62 சதவீதமான ஆண்களும் 1.6 சதவீதமானோர் பெண்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கை, சுகாதார சேவைகள் திணைக்கத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபாலவிடம் குறித்த திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் சிசிற லியனகேயினால் கையளிக்கப்பட்டது.
இலங்கை எயிட்ஸ் அறிக்கையின் பிரகாரம் 25-49 வயதுக்குட்பட்டோருக்கு பெரும்பாலாக இந்த எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வயதுக்குட்பட்டவர்களின் தொகை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த அளவிலான எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் நாடுகளுக்குள் இலங்கை வகைப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு நாட்டின் சனத்தொகைக்கு 1 சதவீதத்துக்கும் குறைவான தொகையில் எச்.ஐ.வி தொற்று ஏற்படுமாயின் அது குறைந்தளவு எச்.ஐ.வி தொற்று உள்ள நாடு என்று வகைப்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே எச்.ஐ.வி தொற்று அதிகமாகக் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago