2025 மே 16, வெள்ளிக்கிழமை

புளூமென்டல் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மற்றுமொரு நபர் பலி

George   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொட்டாஞ்சேனை புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், இன்று திங்கட்கிழமை(03) அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிரோஷன் சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

புளத்சிங்ஹள நிரோஷன் சம்பத் என அழைக்கப்படும் இவர் 36 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பத்தில் காயமடைந்த மேலும்  ஐந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(31) கொழும்பு, கொட்டாஞ்சேனை, புளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 12பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவில் ஆதரவாளர்கள் மீதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன் கொட்டாஞ்சேனை பெனடிக் கல்லூரி மைதானத்துக்கு முன்னால் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த சுமார் 250 - 300பேர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த மைதானத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இலக்கத் தகடு அற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் ரக வாகனமொன்றில் வந்திறங்கிய நால்வரே, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தவர்களை குறுக்கிட்டு ரீ - 56 ரக துப்பாக்கியினால் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருந்தனர்.

இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தில் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டிருந்த போதிலும் அவர் மற்றொரு தரப்பினருடன் கொட்டாஞ்சேனை பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தார்.

ஏனையவர்கள், புளுமெண்டல் வீதியினூடாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டு ஆமர் வீதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்; தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதா பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .