2025 மே 16, வெள்ளிக்கிழமை

வசந்த பெரேரா சரணடைந்தார்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேராக மாத்தளை பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (03) சரணடைந்துள்ளார்.

அரசியல் கட்சி ஆதரவாளர் ஒருவரை கடத்திச்சென்று அவரை மாத்தளையிலுள்ள பிரதேசமொன்றில் வைத்து தாக்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கட்சி ஆதரவாளர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் தாக்கப்பட்டுள்ளார் என்று கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி, மாத்தளை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 4 பேர் மாத்தளை பொலிஸாரினால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று சரணடைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .