Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில், அரசியலமைப்பின் ஒற்றையாட்சி தன்மை விட்டுக்கொடுக்கப்படுமென கூறிய, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ, தான் பிரிவிணைக்கு இடம்கொடுக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
ஜாதிக்க எக்கமுத்துவ எனும் 61 சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு, மஹிந்தவுடன் 5 நிபந்தனைகள் அடிப்படையில் ஒப்பந்தம் செய்த நிகழ்வு , விகார மகாதேவி பூங்காவின் திறந்த அரங்கத்தில் நடந்த போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அந்ந நிபந்தனைகள் பின்வறுமாறு:
அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தில் மேற்க்கொண்ட போலி திருத்தங்களை சரிசெய்தல்
தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல்
மக்களுக்கு உண்மையான நிவாரணம் வழங்குதல்
பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்தல்
உள்நாட்டு உற்பத்தியில் தங்கியுள்ள பொருளாதாரத்தை உருவாக்குதல்
ஹலால் பிரச்சினை மற்றும் அளுத்கமை கலவரங்களை விசாரித்து, அந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்
ஐக்கிய தேசியக் கட்சியின்' தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ள புதிய நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இருக்கமாட்டாது என மஹிந்த கூறினார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்ட்டிக் கோரிக்கையுடன் இவ்வாறான புதிய நாடு உண்டாகும் என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உருவாக்கும் புதிய நாட்டில் சகல இலங்கையர்களும் ஒற்றுமையாக வாழவும் அவர்கள் தத்தமது சமயங்களை கடைப்பிடிக்கும் உரிமையை கொண்டிருக்கும்
நாட்டை அபிவிருத்தி செய்யும் போதுதான் குறித்த ஒரு மாகாணத்துக்கு முன்னுரிமை வழங்கவில்லையென கூறும். ஐ.தே.க ஆட்சியில் தனது பொருளாதார சாதனைகள் பின்நோhக்கி தள்ளப்படும் என கூறினார்.
மொத்த தேசிய உற்பத்தி தனது ஆட்சியில் 3 மடங்காக அதிகரித்து, கணினி அறிவு 3 சதவீதத்திலிருந்து 45 சதவிதமாக அதிகரித்தது என தெரிவித்தார்
வெளிநாட்டு டொலர்களுக்காக தேசப்பக்தர்களை தோற்கடிக்கும் முயற்சியில் பல சக்திகள் ஈடுபட்டுள்ளன. இந்த வேலையில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல, நல்லபோக்குடன் இந்த ஒப்பந்தத்தை தான் ஜாதிக்க எக்கமுத்துவவுடன் செய்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago