Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என்று கூறப்படும் இலக்கம் 90/7 கடவத்தை வீதி, தெஹிவளை எனும் முகவரியைச் சேர்ந்த வெலே சுதா என்று அழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமாராவுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தால் தம்மிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரம் மூலம் சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்களை சேகரித்த வெலே சுதாவின் சொத்துக்களை சொத்துகள் அரச உடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அவருடன் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது வெலே சுதாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். வெலே சுதாவின் கருப்பு பணத்தை இந்த நால்வரே வெள்ளைப்பணமாக மாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
0112320141, 0112320145, 0112422176, 0112328043 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கமுடியும்.
இலக்கம் 91/A கடவத்தை வீதி, தெஹிவளையைச் சேர்ந்த கம்பொல விதானகே திலினி நில்மினி (அடையாள அட்டை இலக்கம் 877672042V), 14/1 ஹல்கஸ்வத்த வீதி, கிருலப்பனை, கொழும்பு-06ச் சேர்ந்த பினரகமகே தோன நதிகா நில்மினி (அடையாள அட்டை இலக்கம் 826150394V), T 477 ராஜகுரு ஸ்ரீ சுபதி வீதி, வெள்ளவத்தையைச் சேர்ந்த ரஜகல்கொட கமகே சுகத் குமாரா (அடையாள அட்டை இலக்கம் 793074433V)மற்றும் இல 70/1 ஹெல இவுர வீதி, தெஹிவளைச் சேர்ந்த அசங்க ஜானக்க பொன்சேக்கா (அடையாள அட்டை இலக்கம் 812500112V) ஆகிய சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago