2025 மே 16, வெள்ளிக்கிழமை

நாட்டில் இன, சமய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது படைவீரர்கள் உயிர்த்தியாகம் செய்து வெற்றிபெற்ற சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாத்து அவர்களது பிரார்த்தனையாகவிருந்த இன மற்றும் சமய நல்லிணக்கம் நாட்டில் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டை சமாதானமான ஒரு நாடாக முன்கொண்டுசெல்ல வேண்டுமானால் நாட்டில் வாழும் எல்லா இனங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையீனத்தைப் போக்கி சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் இதற்காக மிகவும் அர்ப்பணத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு பாதுகாப்பு சேவைக் கல்லூரியின் 2014ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்களை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீர்ர்களின் குடும்பங்களின் நலனோம்புகைக்காக அரசாங்கம் என்றவகையில் செய்ய முடியுமான அதியுயர்ந்த கடமைகளை செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

படைவீர்ர்கள் தமது உயிர்களை தியாகம் செய்தது முழு தாய் நாட்டிற்காகவுமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களது பிள்ளைகளை கவனிக்க வேண்டியதும் அவர்களது எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியதும் சமூகத்தில் எல்லோரினதும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு செயலாளர் பீ.எம்.யு. பஸ்நாயக்க உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகளும் முப்படைத் தளபதிகளும் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .