2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாரத கொலை வழக்கு: டிரயல் அட்பார் நியமனம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை கொலைச்செய்தனர் என்ற குற்றச்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசேட வழக்காக கருத்தி விசாரணை செய்வதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் நியமித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  சட்டமா அதிபரின் கோரிக்கையை அடுத்தே டிரயல் அட்பார் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக நீதிபதி ஷிரான் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பத்மினி ரணவக குணதிலக மற்றும் எம்.சி.பீ.எஸ் மொராயஸ் ஆகிய இருவரும் ஏனை நீதிபதிகளாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .