2025 மே 16, வெள்ளிக்கிழமை

'விஷ' விவகாரம் சூடுபிடிப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கு பிறகு டிலான் பெரேரா, பதுளையில் வைத்து விஷம் குடிக்க வேண்டியேற்படும் என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று புதன்கிழமை(05) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான நிலையை அமைச்சர் டிலான்பெரேரா நாட்டுக்கு எடுத்துகாட்டுவார் எனவும் தேர்தலுக்கு பின்னர் அவர் விஷம் குடிப்பதால் அது இடம்பெறும் எனவும் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார். 

இதேவேளை, கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டொன்றை செவ்வாய்க்கிழமை நடத்திய முன்னாள் எம்.பியான டிலான் பெரேரா, 

நஞ்சுப் போத்தல்கள் சிலவற்றை கொண்டுவந்திருந்த அவர், ஒவ்வொரு போத்தல்களாக எடுத்து காண்பித்து அவற்றுக்கு விளக்கங்களும் அளித்தார்.

அதிலொன்று, மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய பிணை முறி முறைக்கேடுக்கு ஒத்துழைப்பு நல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்றார். 

மற்றொன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு, பாரிய மோசடியில் ஈடுபட்ட மத்திய வங்கியின் ஆளுநருக்கு மற்றொன்று, அதிர்ஷ்ட இலாப சீட்டு முறைமையை அறிமுகப்படுத்திய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஒன்று, மணல் வர்த்தகத்தை பெற்றுகொடுத்த ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு ஒன்று வழங்குவது உசிதமானது என்றார்.

மக்களின் நிதியை கொள்ளையடித்தவர்ளே நஞ்சருந்துங்கள் என்றுரைத்த மாதுலுவாவே சோபித்த தேரரை சந்தித்து அந்த நஞ்சு போத்தல்களை கொடுத்து மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு பருகக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .