2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா ஆதரவு

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்புடனும் சர்வதேச ஆதரவுவுடனும் இலங்கையில், நீதி மற்றும் நல்லிணக்கத்துக்குமான நம்பகமான உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என மீள வலியுறுத்தியுள்ளது.

ஐநாவின் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச ஆதரவுடன் நடத்தப்படும், இலங்கைக்கே உரித்தான நீதிக்கும் நல்லிணக்கத்துக்கான நம்பகமான உள்நாட்டு செயன்முறைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமென நியூயோர்க்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியபோது அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கூறினார்.

இலங்கையில் ஜனநாயக சுதந்திரத்தை கொண்டுவரவும், ஐநா மற்றும் வெளிநாட்டு முக்கிய பங்காளர்களுடன் உறவுகளை புதுப்பிக்கவும் புதிய இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் துணிகரமான நடவடிக்கைகளை கெரி பாராட்டினார்.

தூய வலு வகைகளை பயன்படுத்துவதிலும், காலநிலை மாற்றம் தொடர்பான ஒத்துழைப்பை முன்னேற்றுவதிலும் வெளிப்படைத் தன்மையான அரசாங்க இலக்குகளை நோக்கி செயற்படுவதிலும் அமெரிக்கா எவ்வகையில் இலங்கைக்கு உதவமுடியுமென இராஜாங்க செயலாளரும், ஜனாதிபதி சிறிசேனவும் கலந்துரையாடியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .