2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நெத்தலிக்குள் ஹெரோய்ன்: பெண் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரித்த நெத்தலியின் வயிற்றுக்குள், பக்கற் செய்யப்பட்ட ஹெரோய்னை வைத்து, கைதியொருவருக்கு கொண்டு சென்ற 54 வயதான பெண்ணைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிக்கு உணவு கொண்டுசெல்வதைப் போல, சிறைச்சாலைக்குள் அந்த ஹெரோய்னை அப்பெண் கொண்டுசெல்வதற்கு முயன்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொரித்த நெத்தலியின் வயிறுக்குள் இருந்தவற்றை அகற்றிவிட்டு, அதற்குள் சின்னஞ்சிறிய பொதிகளை மறைத்துவைத்து, சாப்பாடு கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்தே 2 கிராம் மற்றும் 300 மில்லிகிராம் ஹெரோயினைக் கொண்டுசெல்வதற்கு முயன்றுள்ளார்.

84 பக்கெற்றுகள் இருந்ததாகவும் அவை ஒவ்வொன்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X