2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மைத்திரியின் தவறை எஸ்.பீ.யே காட்டிக்கொடுத்தார்

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருடைய பதவியை தவறாகப் பயன்படுத்துகின்றார் என்பதை, அமைச்சர்
எஸ்.பீ.திஸாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ள கருத்து காட்டிக்கொடுத்து விட்டது என்று, பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

'அரசியல் தீர்மானங்களும் கைதுகளும், ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நிரூபித்துக் காட்டுமாறு, அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரைக் கைது செய்ய விடாது தடுத்தது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமருமே ஆகும் என்றும் அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்திருந்தார். இவற்றை வைத்து பார்க்கும் போது, யாரை கைது செய்ய வேண்டும், யாரை கைது செய்யக்கூடாது என்பது பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வது ஜனாபதியே ஆகும்' என்று பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இதுவே, ஜனாதிபதி அவருடைய பதவியைத் தவறான முறையில் பயன்படுத்துகின்றார் என்பதற்கு நல்ல உதாரணம். தனது மகனையும் மனைவியையும் கைது செய்யக்கூடாது என்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தமொன்று செய்யப்பட்டதாக, திங்கட்கிழமை (15) தெரிவித்திருந்ததாகவும் இதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதில் கூற வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X