Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 17 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஏசிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர், மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எழுதிய கடிதம், எப்போது எழுதப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கடிதம், தேரரை விளக்கமறியலில் வைப்பதற்கு முன்னர் எழுதப்பட்டது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர், இந்தக் கடிதம் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் சிறைச்சாலை சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகள் ஆரம்பித்திருந்தனர்.
அந்தக் கடிதம் தன்னாலேயே எழுதப்பட்டதாகவும் விளக்கமறியலுக்கு வருவதற்கு முன்பே அந்தக் கடிதத்தை தான் எழுதியதாகவும் இந்த விசாரணையின் போது, தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தான் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக அறிந்து கொண்டமையால் தான் இந்தக் கடிதத்தை எழுத திட்டமிட்டதாகவும் இவர் கூறியுள்ளார்.
பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி வெளியாகிய இந்தக் கடிதம் தொடர்பில் சிறைச்சாலை சிறப்பு விசாரணை பிரிவு, ஞானசார தேரரிடம் வினவிய போது, தனது ஆதரவாளர்கள் இதனை ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் விளக்கமறியலில் இருந்தாலும், பொது பல சேனா அன்று ஆரம்பித்த அஹிம்சை வழிப் புரட்சி தொடரும் என்றும் கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக தற்போது தனக்குக் கிடைத்துள்ள முடிவையும் நாட்டுக்காக தான் ஏற்றுக்கொள்வதாகவும் இது தனக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகக் கருதுவதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago