Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 12 , பி.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லியில், திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பின் போது, இந்தத் திட்டம் குறித்து தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அவர், இதுவரையில் இத்திட்டம் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து, இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இந்திய மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் நிர்மாணிக்க எதிர்பார்த்துள்;ளதற்கான பூரண நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்க முயற்சித்து வருவதாக இந்திய மத்திய கனரக மற்றும் பொதுத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இராமநாதபுரத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இணை அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
4 hours ago