2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மலேரியா தொற்றியிருந்தால் உடனே சிகிச்சையளிக்கவும்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 12 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேரியா தொற்றுக்கு உள்ளான நோயாளியொருவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்படுவாராயின், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால், மலேரியா ஒழிப்புக் குழுவின் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

மலேரியா தொற்றுக்கு உள்ளாகியிருந்த இந்தியர் ஒருவர், கடந்த 3ஆம் திகதியன்று நுவரெலியா பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, அமைச்சர் சேனாரத்ன, மேற்கண்ட ஆலோசனையை வழங்கியுள்ளார். 

இலங்கையிலிருந்து மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இலங்கையர்கள் எவரும் இந்தத் தொற்றுக்கு உள்ளாகியில்லை. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களே, இந்த மலேரியா தொற்றுக்கு உள்ளான நிலையில் நாட்டுக்குள் வருகின்றனர். 

இனிவரும் காலங்களிலும் அவ்வாறான நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களாயின், அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு, சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X