2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பட்டாசு கொளுத்தும் போது கவனம் தேவை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 13 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் - சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஏற்படக்கூடிய விபத்துக்ளைத் தவிர்ப்பதற்கு மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மகளிர் விவகார மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சந்திராணி பண்டார, பட்டாசுகளினால் ஏற்படக்கூடிய விபத்துகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் கடமையாகும் என்றும் கூறியுள்ளார். 

எல்லா ஆண்டுகளிலும் பட்டாசு விபத்துகளினால் சிறுவர்களின் கண்கள், கைகள் மற்றும் கால்கள் போன்ற உறுப்புக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சிலவேளை அவை நிரந்தர பாதிப்புகளாக மாறக்கூடிய அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த விடயங்கள் குறித்து பெரியவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X