2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பந்துவாகத் தோன்றிய பிந்துவுக்கு சிக்கல்

Gavitha   / 2016 நவம்பர் 21 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னிலை நடிகர்களில் ஒருவரான பந்து சமரசிங்கவைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட பிந்து போத்தலேகமவுக்கு எதிராக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டது.

பந்து சமரசிங்கவைப் போன்ற தோற்றத்தில், பல திரைப்படிங்களில் நடித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, பிந்து போத்தலேகமவுக்கு எதிராக,  இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிந்துவின் இந்த நடவடிக்கையால், பந்து சமரசிங்கவின் அறிவுசார் சொத்துரிமை மீறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டடது. இந்நிலையில், இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, நீதிமன்றம் அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .