2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'கல்வித்துறைக்கான நிதியை அரசாங்கம் மறைத்துவிட்டது'

Gavitha   / 2016 நவம்பர் 21 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

'2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், கல்வித் துறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதியை மறைத்து விட்டு, அரசாங்கம் தேசத்தை தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிக்கின்றது' என்று இணைந்த எதிரணியினர் நேற்றுத் திங்கட்கிழமை (21) குற்றஞ்சாட்டினர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், கல்வித்துறைக்காக ஒதுக்கப்படவிருந்த தொகையில், 175 பில்லியன் ரூபாயை குறைத்துள்ளது. பாதீட்டின் போது, 3,577 பாலர் பாடசாலைகளுக்காக 10,000 மில்லியன் ரூபாயயும் 500 பாலர் பாடசாலைகளுக்கான தொழில்நுட்ப குறிப்பு புத்தகத் தேவைக்காக 6,500 மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது' என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 'உயர்நிலைப் பாடசாலைகள் 10,000க்கான அபிவிருத்திக்காக 15,000 மில்லியன் ரூபாயும் அவற்றின் தொழில்நுட்ப குறிப்பு புத்தகங்களுக்காக 250 உயர்நிலை பாடசாலைகளுக்காக 7,170 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கல்வித்துறைக்காக ஒரு பாரியத் தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருந்தது. எனினும் தொழில்நுட்ப குறிப்பு புத்தகங்களை இணைத்து, சரியான தொகையை அரசாங்கம் குறைத்துக்காட்டியுள்ளது' என்று அவர் குற்றஞ்சாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .