2021 ஜூன் 14, திங்கட்கிழமை

’21,000 ஒட்சிசன் சிலிண்டர்கள் தேவை’

Niroshini   / 2021 மே 13 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வைத்தியசாலைகளில் தற்போது காணப்படும் ஒட்சிசன் சிலிண்டர்களுக்கு மேலதிகமாக, 21 ஆயிரம் ஒட்சிசன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்படி 21ஆயிரம் ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டுமென்று, அரச நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்துக்கு, பெசில் ராஜபக்ஷ தலைமையிலான பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதிச் செயலணி அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, சிங்கப்பூரில் இருந்து, தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை, லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ளதாகவும் அந்தச் சிலிண்டர்கள், இன்னும் ஒருசில தினங்களுக்குள் நாட்டை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், இலங்கையில் ஒட்சிசன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சிலோம் ஒக்சாஜின் லிமிடட் நிறுவனமும் கேஸ் வர்ட் லங்கா லிமிடட் நிறுவனமும், இலங்கைக்குத் தேவையானளவு ஒட்சிசனை உற்பத்தி செய்துவருகின்றன என்றும், மேற்படி செயலணி குறிப்பிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .