2026 மே 14, வியாழக்கிழமை

dd

‘21/4 தாக்குதல் குறித்து கவனஞ் செலுத்துவேன்‘

Editorial   / 2021 ஜூன் 01 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீப்பற்றியெரிந்த எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் விரைவாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமரிடம் உறுதியளித்துள்ள புதிய சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் தான் அதிகக் கவனஞ் செலுத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக விரைவாக வழக்குத் தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 48ஆவது சட்டமா அதிபராக கடமைகளைப் பெறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை அலரி மாளிகையில் நேற்று(31) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் இதன்போது தனது வாழ்த்துகளை புதிய சட்டமா அதிபருக்கு தெரிவித்ததோடு, கொழும்பு துறைமுக கடற்பரப்புக்குள் தீப்பற்றி எரிந்த எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலும், இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சட்டநடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

கொலை வழக்கு  தொடர்பில் நீதவான்  நீதிமன்றில் இடம்பெற்று வரும்
விசாரணைகளின் போது ஆரம்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால்  
ஆலோசனை வழங்கப்பட்டது.  ஆனால், தற்போது அவ்வாறான தன்மை
காணப்படாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள  நெருக்கடிகள் குறித்து
எடுத்துரைத்த பிரதமர் இது குறித்து  நீதி அமைச்சுடன் கலந்துரையாடி உரிய
தீர்வை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .