S.Renuka / 2026 மார்ச் 19 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், க.பொ.த சாதாரண தர விடைத் தாள்கள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள், ஏற்கெனவே ஆரம்பித்து விட்டதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சாதாரண பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்முறை பரீட்சைகள் முடிந்தவுடன் சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago