Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் மொணராகலை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ அறது அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர், பொலிஸாரினால் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 10 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில், கோட்டபோவா பகுதியில் இடம்பெற்ற பெரஹரா பார்ப்பதற்கு 28 வயதான இளைஞன் சென்றுக்கொண்டிருந்த போது, வீட்டுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் வைத்து 26 வயதான ஒருவரை சந்தித்துள்ளார்.
26 வயது இளைஞனும் பெஹரா பார்வையிடுவதற்காக செல்வதாக கூறியுள்ளார். அந்த 26 வயது இளைஞனின் மோட்டார் சைக்கிளில் இருவரும் ஏறி சென்றுள்ளனர்.
பெரஹரா நிறைவடைந்து இரவு 11 மணியளவில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ரம்புட்டான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று மரண அச்சுறுத்தல் விடுத்து, 28 வயது இளைஞனை, 26 வயதான இளைஞன் கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
வன்புணர்வுக்கு உட்படுத்தியதன் பின்னர்,பாதிக்கப்பட்ட இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வர்த்தக நிலையத்திற்கு அருகில் வந்ததும், இளைஞனை இறக்கிவிட்டுவிட்டு, சம்பவம் தொடர்பில் யாருக்காவது தெரிவித்தால் படுகொலை செய்து விடுவேன் என மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தனது நண்பரிடம் தனக்கு நேர்ந்தது குறித்து தெரிவித்துள்ள இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார். அவரை பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட இளைஞன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமண சிறி குணதிலக்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .