Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
29 கோடியே 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்ககளை சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பெண்ணொருவர் புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, ஒருகொடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதான வர்த்தகரான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான ஏ.ஐ-274 என்ற இலக்கத்தை கொண்ட விமானத்தின் ஊடாக புதன்கிழமை (30) அதிகாலை 3.15 மணியளவில் இந்தியா-சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணிப்பதற்காவே அப்பெண் விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளார்.
அப்பெண் உடுத்தியிருந்த ஆடைக்குள் 2 கிலோ 311 கிராம் 75 மில்லிகிராம் நிறையுடைய மாணிக்கக்கற்கள் தொகையை மறைத்துவைத்து எடுத்துச் செல்ல முயன்றபோதே கைது செய்யப்பட்டார்.
டி.கே.ஜி கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago