Nirosh / 2021 ஜனவரி 07 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவத்தகம, வீரம்புக்கெதர பொலிஸ் பிரிவுகளில் துப்பாக்கி, ஆயுதங்களைக் காட்டி பயமுறுத்தி வீட்டிலுள்ள பணம், பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திஸ்ஸமஹாரா பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கி, ரவை, 3 தொலைபேசிகள், அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் பல்வேறு பிரதேசங்களில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களையும் மாவத்தகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, சந்தேகநபர்களை மேலும் 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்குப் பொலிஸார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago