2025 மே 14, புதன்கிழமை

3 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் சிக்கியது

Janu   / 2023 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில்  வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் போதைப்பொருள் கடத்தி செல்வதாக  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பேருந்தை  விசேட அதிரடிப்படையினரால் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  நபரை மற்றும்  அவரிடமிறுந்து மீட்கப்பட்ட  3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .