2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

3 மாதங்களின் பின்னர் ஆரம்பமான விமான சேவை

Editorial   / 2019 ஜூன் 01 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு மூன்று மாதங்களுக்கு பின்னர் இலங்கையில் இருந்து முதலாது விமானம் இன்று பிற்பகல் 12.20 மணியளவில் புறப்பட்டுள்ளது.

அந்த விமானம் மாலை 3.10 மணியளவில் கராச்சி நகரை சென்றடையவுள்ளது.பின்னர் அந்த விமானம் 4.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு மீண்டும் புறப்படவுள்ளது.

இந்த விமான பயணத்துக்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ஏ-320 ஏயர் பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 166 பயணிகளும் 8 பணிக்குழாமினரும் சென்றுள்ளனர்.

பெப்ரவரி மாதம்27 ஆம் திகதி பாகிஸ்தான் விமான சேவை அதிகார சபை அந்நாட்டு வான்வெளியை தற்காலிகமாக மூடியமை காரணமாக பல சர்வதேச விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.                 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .