Editorial / 2026 ஜனவரி 28 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை கோட்டை வீதி,டச்பே கடற்கரையில் சட்டவிரோத நிர்மாணம் ஒன்றை அமைத்தமை, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை ஆகிய குற்றங்களை புரிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் பௌத்த பிக்குகள் மூன்று பேர் உட்பட 10 பேரின் விளக்கமறியல் பெப்ரவரி 2 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் புதன்கிழமை (28) அன்று பிறப்பித்தார்.
இந்த வழக்கு புதன்கிழமை (28) அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளான பெளத்த பிக்குகள் உட்பட்ட 10 பேர் சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான உதய கம்பன்பிலவும் மேலும் 5 சட்டத்தரணிகளும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் முன்வைக்கப்பட்டது.இதனை அடுத்து இருதரப்பினரது வாதங்களை செவிமடுத்த நீதிபதி வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 2 ந் திகதிக்கு தவணையிட்டு, விளக்கமறியலை நீடித்தார்.
பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குமாறு கோரினர். .இதனை பொலிஸ் தரப்பும்,கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் அபிவிருத்தி திணைக்களமும் ஆட்சேபித்தனர். இதனை அடுத்து மன்று பிணைக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதேவேளை தமது தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்கிக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கின் குரல் பதிவுகள், எழுத்து பூர்வ அறிக்கைகள் தேவையாக உள்ளது என பிரதிவாதி தரப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவற்றை வழங்க முடியுமென நீதிமன்றம் அறிவித்தது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago