2026 மே 02, சனிக்கிழமை

4,236 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கல்வியியல் கல்லூரிகளில்,  2015/2017 கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 4,236 டிப்ளோமாதாரிகளுக்கு,  ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ் மொழி மூலம்,  1,404  பேருக்கு இதன்போது நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அளுத்கம, அட்டாளைச்சேனை, கொட்டகல ஆகிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமாப் பட்டங்களைப்  பெற்றவர்கள் இதில் உள்ளடங்கியுள்ளனர்.

இதற்கமைய, தமிழ் - 173, இந்து சமயம் - 28, இஸ்லாம் - 23, கிறிஸ்தவம் - 37, மனைப்பொருளியல் - 44, தகவல் தொழில் நுட்பம் - 104, கணிதம் - 69, சங்கீதம் - 38, விளையாட்டும், உடற்கல்வியும் - 67, ஆரம்பக் கல்வி - 327, விஞ்ஞானம் - 122, இரண்டாம் மொழி தமிழ் - 50, சமூகக் கல்வி - 36, விசேட கல்வி - 30, நாடகமும் அரங்கியலும் - 15, விவசாயம் - 49, சித்திரம் - 59, வணிகக் கல்வி - 50, வடிவமைப்பு - 14, நடனம் - 25, மெகானிக்கல் வடிவமைப்பு - 04, நிர்மாண வடிவமைப்பு - 36, இலத்திரனியல் வடிவமைப்பு - 04  என்ற அடிப்படையில் நியமனங்கள்  வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .