Janu / 2026 மே 07 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 40 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச விசா வசதி (Free Visa) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது அவசியமான ஒன்று என்பதால், குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை ஆறு மாதங்களுக்குப் பிறகு மீளாய்வு செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலவச விசா பெறும் நாடுகள்: ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜெர்மனி, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, கஜகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்வீடன், பாகிஸ்தான், கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்கொரியா, ස්விட்சர்லாந்து, துருக்கி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 40 நாடுகளுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசா இதன் மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: இது குறித்து அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இதனை நடைமுறைப்படுத்த நாம் உத்தேசிக்கவில்லை. எனவேதான், மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization - ETA) நாம் கட்டாயமாக்கியுள்ளோம். அதன் ஊடாகவே விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
2 hours ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
09 May 2026