Editorial / 2020 ஜூன் 10 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 40 நாள்களாக, நாட்டில் எந்தவொரு கொரோனா வைரஸ் நோயாளிகளும் இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனக ஹேரத், ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் எவருக்காவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு அறிவிக்குமென்றார்.
பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், இன்று போய் நாளை வா என்பது போலவே, தொடர்ந்தும் பொதுத் தேர்தலுக்கான திகதி காலந்தாழ்த்தப்பட்டு வருகிறது என்றும் எந்தவொரு கொரோனா நோயாளியும் இனங்காணப்படாத வரையில் தேர்தலைக் காலந்தாழ்த்தவே தேர்தல் ஆணைக்குழு எதிர்ப்பார்த்துள்ளது என்றும் கூறினார்.
கடந்த 40 நாள்களாக நாட்டில் எந்தவொரு கொரோனா நோயாளியும் இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த அவர், தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தவதற்காகவல்ல, தேர்தலைக் காலந்தாழ்த்துவதற்கே உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்துச் செயற்பாடுகளையும், எதிர்க்கட்சிகள் ஆதரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago