Freelancer / 2023 மார்ச் 18 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (17) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறியின் சாரதி இருக்கைக்கு அருகில் ஒரு பையில் 49,500 ரூபா பணமும், சாரதி இருக்கைக்கு அடியில் 3 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபரின் தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு சாரதியை விடுவிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய மீன் வியாபாரி என பொலிஸார் தெரிவித்தனர். R
15 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
5 hours ago
9 hours ago