Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
13 வருட கட்டாயக் கல்வியின் வேலைத்திட்டத்துக்காக புதிதாக 5,000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
நேற்று (17) இடம்பெற்ற அடுத்த ஆண்டுக்கான இலவச பாட நூல் விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக, நிதி அமைச்சின் செயலாளரால் கல்வி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில் கல்வித்திட்டத்துக்காக இதற்கு முன்னர் 1,500 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
13 வருட கட்டாயக் கல்வியின் ஊடாக உயர் தரத்தில் தொழில் துறைசார்ந்த 26 பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களுக்கான தொழில் பயிற்சிக் காலத்தில் நாளொன்றிற்கு 500 ரூபாய் வீதம் வழங்கவும் கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் கல்வியமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் கூறினார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago