2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் நடத்தப்பட்ட கொலை

Freelancer   / 2025 மார்ச் 24 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை – தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவம் 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், இதற்காக இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு மாத்தறை பதில் நீதவான் அனுமதி வழங்கினார். 

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. 
 
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த மோதலின் விளைவாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X