Editorial / 2026 ஜனவரி 06 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை விடவும் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள, பாரியளவான போதைப்பொருள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (06) அன்று கைப்பற்றப்பட்டன.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. "கிரீன் சேனல்" வழியாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர்கள் அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
27 வயதுடைய அந்த நபர் மும்பையில் உள்ள ஒரு தொலைபேசி பரிமாற்றத்தில் பணிபுரிகிறார். மற்ற இரண்டு பெண்கள் மும்பையில் உள்ள பாடசாலை ஆசிரியைகளான, 25 மற்றும் 31 வயதுடையவர்கள். பெண்களில் ஒருவர் அந்த நபரை மணந்துள்ளார், மற்றவர் அவரது சகோதரி.
சுங்க அதிகாரிகளின் ஆரம்ப விசாரணையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பேங்கொக்கிக்கு பயணம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள், செவ்வாய்க்கிழமை (06) அன்று காலை 11.07 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
அவர்கள் 03 சூட்கேஸ்களில் 100 கிராமுக்கு சற்று அதிகமான எடையுள்ள 48 பொட்டலங்களில் 50 கிலோகிராம் "குஷ்" போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருளாகும். இதற்கு முன்னர், 2025 ஆண்டு வெசாக் போயா நாளில் பிரிட்டிஷ் விமான பணிப்பெண் ஒருவர் கொண்டு வந்த 46 கிலோகிராம் "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த மூன்று இந்தியர்களையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Kaṭṭunāyak
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026