2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

6 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 லட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரகீத் சுரங்க வீரத் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸவின் தலைமையிலான குழுவினர் வவுனியா நகரப் பகுதியில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மோட்டர் சைக்கிளும் உடமையில் இருந்த 6 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டன.

சம்பவத்தில் வவுனியா மருக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுயை நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .