Janu / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் இருந்து வெளியேறி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆளுகை மற்றும் ஊழலை சரிசெய்வது அவசியம் என 51% மக்கள் கூறுகின்றனர்.
'அரகலய' (போராட்டம்) மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வழிவகுத்தது என்று ஏறக்குறைய 60% மக்கள் நம்பவில்லை என்றே வெரிட்டே ரிசர்ச் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2023 ஓகஸ்ட் 10 ஆம் திகதியன்று ‘அரகலய’ போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் இருந்து வெளியேறி ஒரு வருடத்திற்குப் பிறகு, இலங்கையின் மறுகட்டமைப்புக்கு ஊழல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது அவசியம் என்று 51% மக்கள் கருதுகின்றனர்.
2022 ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை,‘அரகலய' காலி முகத்திடலில் குறிப்பிடத்தக்க இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது.
விருப்பங்கள் மற்றும் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டதா?
'அரகலய' மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வழிவகுத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, 60% பேர் 'பெரும்பாலும் இல்லை' என்றும், 11% பேர் 'பெரும்பாலும் ஆம்' என்றும், 29% பேர் 'அபிப்பிராயம் இல்லை' என்றும் பதிலளித்துள்ளனர்.
புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் என்பன இக்காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளாகும்.
ஆட்சியா, ஸ்திரத்தன்மையா அல்லது பொருளாதார அமைப்பா?
பதிலளித்தவர்களிடம், ‘பின்வரும் கூற்றுகளில், நீங்கள் எதை அதிகம் ஆதரிப்பீர்கள்?’ என்றும் கேட்கப்பட்டது.
1. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, ஜனநாயக அவகாசத்தை விட ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.
2. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்தை சரிசெய்ய தீர்வு காண வேண்டும்.
3. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, பொருளாதார அமைப்பை மாற்றுவது அவசியம்.
பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் - 51% - ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டியது அவசியம் என்று நம்புகிறார்கள். 34% பேர் பொருளாதார அமைப்பில் மாற்றத்தை விரும்புகிறார்கள் மற்றும் 15% பேர் ஜனநாயக அவகாசத்தை விட ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
கணக்கெடுப்பு நடத்தப்பட்ட முறை
வான்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடட் வாக்குப்பதிவு பங்காளியாக செயல்படும் வெரிட்டே ரிசர்ச் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு (Syndicated Survey) கருவியின் ஒரு அங்கமாக இக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. வெரிட்டே ரிசர்ச்சின் சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு கருவியானது, இலங்கை மக்களின் உணர்வுகளை அளவிடுவதற்கான வாய்ப்பை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. 95% நம்பக இடைவெளி மற்றும் ± 3% வழு எல்லயை உறுதிசெய்யும் வகையில் இதன் மாதிரி மற்றும் வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 2023 ஜூன் மாதத்தில் தேசிய மட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த 1,008 வளர்ந்தவர்களின் சீரற்ற மாதிரியை இக் கருத்துக்கணிப்பு கொண்டிருந்தது.

9 minute ago
12 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
4 hours ago