Janu / 2026 மார்ச் 02 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
திங்கட்கிழமை (02) அதிகாலை 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதிக்குள், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த 33 விமானப் பயணங்களும், இங்கிருந்து அந்த நாடுகளுக்குப் புறப்படவிருந்த 32 விமானப் பயணங்களும் என மொத்தம் 65 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த கல்ஃப் எயார் (Gulf Air), எயார் அரேபியா (Air Arabia), ஃப்ளை துபாய் (flydubai) மற்றும் கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான 4 விமானங்கள், மீண்டும் அந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
"எனினும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய மத்திய ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகளும் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளும் சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய தூர கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளும் வழமை போல் இயங்கி வருகின்றன."
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விசா காலம் முடிவடைந்திருந்தால், அவர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி மேலும் 14 நாட்களுக்கு விசா காலத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், அவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கு மாற்று விமான சேவைகளை ஒழுங்கு செய்யவும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
டி.கே.ஜி. கபில
52 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
3 hours ago